பதிவு செய்த நாள்
22
பிப்
2020
11:02
தர்மபுரி: அங்காளபரமேஸ்வரி அம்மன் மயானக்கொள்ளை விழாவை முன்னிட்டு, நேற்று பூமிதி விழா நடந்தது. தர்மபுரி, அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானா கொள்ளை திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று காலை, 5:30 மணிக்கு சக்தி கரகம் ஊர்வலம் அழைத்து வரப்பட்டது. காலை, 10:00 மணிக்கு மேல் பூமிதி விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பூ மிதித்தனர். இரவு,7:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் திருவீதி உலா நடந்தது. வரும், 23 காலை, 9:00 மணிக்கு அலகு குத்துதலும், விழாவின் முக்கிய நிகழ்வாக, 11:30 மணிக்கு மயானக்கொள்ளை விழா நடக்கிறது.