திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பையூர் கிராமத்தில் குரு தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.பையூர் கிராமத்தில் தட்சணாமூர்த்திக்கு தனி கோவில் சிறப்புடன் அமைந்துள்ளது. இக்கோவிலில் வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஞானகுரு தட்சணாமூர்த்தி சுவாமிக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட பலவகை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்தனர்.12 அடி உயர ஞானகுரு தட்சணாமூர்த்தி சுவாமிக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. 27 நட்சத்திரம், 12 ராசியினருக்கு மகா சங்கல்பம் செய்து பரிகார பூஜை செய்தனர்.தோஷங்கள் நீங்குவதற்கு கொண்டைக்கடலை மாலை அணிவிக்கப்பட்டது. சுவாமிக்கு பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.