ஸ்ரீவில்லிபுத்துார், :ஸ்ரீவில்லிபுத்துார் பத்திரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியன்று 88 வயது மூதாட்டி கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைத்தார். பத்திரகாளியம்மன் கோயிலில் மகாசிவராத்திரி கொண்டாடப்பட்டது.
நேற்றுமுன்தினம்இரவு 11:50 மணிக்கு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சியை முத்தம்மாள் 88, கோயில் பூசாரிகள் சுந்தரமகாலிங்கம், இருளப்பன், முருகன் ஆகியோர் துவக்கினர்.விறகு அடுப்பில் நெய்யை கொதிக்கவிட்டு வெல்லம், அரிசி மாவு கலந்த அப்ப உருண்டை மிதக்க கையால் எடுத்து பனை ஓலைபெட்டியில் சேகரித்தபோது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குலவையிட்டு வணங்கினர். நேற்று அதிகாலை அம்மனுக்கு அப்பங்கள் படைக்கப்பட்டு, சிறப்பு பூஜைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.