ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மாசி தேரோட்டம் நடந்தது. ராமேஸ்வரம் கோயிலில் பிப்.14 ல் கொடி ஏற்றத்துடன் மாசி சிவராத்திரி விழா துவங்கியது. 9ம் நாள் விழாவான நேற்று அலங்கரிக்கப்பட்ட தேரில் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளியதும் மகா தீபாராதனை நடந்தது.கோயில் இணை ஆணையர் கல்யாணி, தக்கார் குமரன் சேதுபதி, உதவி ஆணையர் ஜெயா, யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.