‘‘இது விலை உயர்ந்த தங்கச்சங்கிலி’’ என தன் கழுத்தில் இருந்த நகையை காட்டி சொன்னார் பாத்திமா. மகளின் செயல் கண்ட நாயகம், ‘‘மகளே! தங்கச் சங்கிலி என பெருமை பேசுகிறாய். ஆனால், அது ஒரு நெருப்புச் சங்கிலி. அதன் மீது ஆசை வைத்தால் அது உன்னையே சுட்டுப் பொசுக்கும் ஜாக்கிரதை!’’ என அறிவுறுத்தி விட்டு வெளியே புறப்பட்டார். அன்று மாலையில் வீடு திரும்பிய போது, மகளின் கழுத்தில் நகை இல்லாததோடு, அவர் சொன்ன விளக்கம் கேட்டு மகிழ்ந்தார். ‘‘ தாங்கள் சொன்ன வார்த்தைகள் என் அறிவு கண்ணைத் திறந்தது. சங்கிலியை விற்று, அதில் கிடைத்த பணத்தில் ஒரு அடிமையை விலைக்கு வாங்கி விடுவித்தேன்’’ என்றார்.