பெண்குழந்தைகள் பிறந்தால் வருந்தும் நிலை அதிகரித்து வருவதை இப்போதும் காண்கிறோம். அது தவறான அணுகுமுறை என்கிறார் நாயகம். பெண்குழந்தை பிறந்த வீட்டிற்கு இறைவன் வானவர்களை அனுப்புகிறான். அவர்கள் குழந்தையின் குடும்பத்தினருக்கு அமைதி உண்டாக வேண்டும் என ஆசீர்வதிப்பர். பின் அக்குழந்தையை சிறகுகளால் வருடி அரவணைப்பர். குழந்தையின் தலை மீது தடவி, ‘இக்குழந்தையை வளர்ப்பவருக்கு இறைவனின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும்’ என்றும் வாழ்த்துவர்.