மானாமதுரை : மானாமதுரை,இளையான்குடி பகுதியில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது குலதெய்வ கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் உட்பட ஏராளமான கோயில்களில் பக்தர்கள் தொடர்ந்து 2 நாட்களாக தங்கினர். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷக ஆராதனை நடந்தது. திருவிழாவை ஒட்டி மானாமதுரை,இளையான்குடி பகுதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.