பதிவு செய்த நாள்
03
மே
2012
10:05
மதுரை: நித்யானந்தாவை நியமித்தது குறித்து பேச, என்னை பிற ஆதீனங்கள் அழைத்தனர். என்னை, அவர்கள் "டார்ச்சர் செய்யக்கூடும் என்பதால், நித்யானந்தா இல்லாமல் வர முடியாது என்று கூறிவிட்டேன், என, மதுரை ஆதீனம் கூறினார். மதுரையில் அவர் கூறியதாவது: இளைய ஆதீனத்தை தேர்வு செய்வதில், மற்ற ஆதீனங்கள் தலையிட முடியாது. அது மரபும் கிடையாது. மற்ற ஆதீனங்களில் ஏற்பட்ட பிரச்னைகளை, நான் தீர்த்து வைத்திருக்கிறேன். நித்யானந்தாவை நியமித்தது குறித்து பேச, என்னை பிற ஆதீனங்கள் அழைத்தனர். என்னை, அவர்கள் "டார்ச்சர் செய்யக்கூடும் என்பதால், நித்யானந்தா இல்லாமல் வர முடியாது என்று கூறிவிட்டேன். இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து, அவரை நீக்குவது குறித்து, 10 நாட்களில் அறிவிக்க வேண்டும் என, ஆதீனங்கள் கூறியுள்ளனர். நான் அறிவிக்கப் போவதில்லை. அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன். மடத்தில் பணிவிடை செய்த பெண்கள் வெளியேற்றப்படவில்லை. பழைய ஆட்கள் தொடர்ந்து பணிபுரிகின்றனர், என்ற ஆதீனத்திடம், நித்யானந்தா சீடர்களால், நீங்கள் சூழ்நிலைக் கைதியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதே, என நிருபர்கள் கேட்டதற்கு, "நான் சூழ்நிலைக் கைதியாக இல்லை; சந்தோஷமாகவே உள்ளேன் என்றார்.