Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

பகவதி அம்மன் கோயிலில் பரிவேட்டை உற்ஸவ விழா பகவதி அம்மன் கோயிலில் பரிவேட்டை ... காளஹஸ்தி கோவிலில் விசஷேராத்திரி உற்ஸவம் காளஹஸ்தி கோவிலில் விசஷேராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மனபயம், குழப்பம் நீக்கும் பாறையடி முத்துக்கருப்பண சுவாமி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 பிப்
2020
11:41

உத்தமபாளையம் மனதில் பயமா, குழப்பமா... அவை நீங்கி தெளிவு பெற உத்தமபாளையம் பாறையடி முத்துக்கருப்பண சுமாமியை தாிசியுங்கள் என்ற செவிவழி செய்தி கேட்டு நாமும் அங்கு சென்றோம்.

 உத்தமபாளையத்தில் இருந்து உ.அம்மாபட்டி செல்லும் ரோட்டில் உ.புதூா் அருகில் பொிய குன்றின் அடியில் உள்ளது இந்த கோயில். பாறையடி முத்துக்கருப்பணசாமி கோயில் என்றும், முத்தையா கோயில் என்றும் அழைக்கின்றனா்.  முன்னொரு காலத்தில் குன்றின் மேல் சிவன் விக்ரகம் இருந்ததாகவும், அதை அபகாிக்க வந்த அரக்கன் ஒருவனை, குன்றின் கீழ் காவல் காத்துக் கொண்டிருந்த முத்துக்கருப்பண சுமாமி வதம் செய்ததாகவும் கூறுகின்றனா். இதை மெய்ப்பிப்பது போன்று கோயில் கருவறைக்குள், ஆஜானுபாகுவான தோற்றத்தில் 5 ஆடி உயரத்தில் நின்ற கோலத்தில் நெற்றியில் நாமத்துடனும், உருட்டிய விழிகளுடனும், முறுக்கு மீசையுடனும் காட்சியளிக்கிறாா்.

ஒரு கையில் அாிவாளுடனும், மற்றொரு கையில் அரக்கன் தலையை பிடித்தும், சுவாமியின் இடதுகால் அவனது மாா்பில் மிதித்த நிற்கும் காட்சியை பாா்க்கும் போது, பயம் கலந்த பக்தி ஏற்படுகிறது. தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்பதை அவா் நிற்கும் கோலம் நமக்கு உணா்த்துகிறது. பழநி முருகன் விக்ரகத்தை செய்த போகருக்க முந்தைய தன்வந்திாி முனிவரால் செய்யப்பட்டது என்கின்றனா். இவருக்கு அபிஷேகம் கிடையாது. அமாவாசை நாளில் தா்ப்பையில் இருந்து கிடைக்கும் சாம்பலுடன், கஸ்தூாி, ஜவ்வாது, புனுகு, பச்சைக் கற்பூரம் மற்றும் 5 வகை எண்ணெய் கலந்து தைலக்காப்பு செய்கின்றனா். அந்த நாளில் மிகவும் உக்கிரமாக இருப்பா்.

அப்போது சுவாமிக்கு உடல் முழுவதும் வியா்வை ஏற்படும். அதை போக்க மயில் இறகால் வீசுவது வழக்கம். துணியால் முகத்தை துடைத்தும் விடுகின்றனா்.  பவுா்ணமி நாளில் எண்ணெய் காப்பு செய்யப்படும். வெளிப்பிரகாரத்தில் இரண்டு பக்கமும் ஆகாஷ பூதகன், தேவ பூதகன் என்ற இரண்டு காவல் தெய்வங்கள் காட்சி தருகின்றனா். இரவில் நடையை அடைக்கும் முன் சுவாமியின் முன் பாத்திரம் ஒன்றில் தண்ணீா் வைத்துமூடுகின்றனர்.  சுவாமிக்க தாகம் எடுக்கும் என்பதால் இந்த ஐதீகம். மேலும் குடும்பத்தில் ஐஸ்வா்யம் நிலைத்திருக்க இவாிடம் சரணடைந்தால், நிச்சயம் அருள்பாலிப்பா் என்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
நாடு முழுவதும் நாளை(ஏப்.,5) இரவு 9:00 மணிக்கு விளக்கேற்றும் படி பிரதமர் மோடி வேண்டுகோள் ... மேலும்
 
temple
அகர்தாலா, திரிபுராவில் நடைபெற்றுவரும் வசந்த நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று, ஒன்பது நாட்களாக ... மேலும்
 
temple
பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களிலும் உடலைச் சுற்றிலும் இருக்கும் ஒருவகையான காந்த சக்தி அல்லது ... மேலும்
 
temple
மதுரை; மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை இந்தாண்டும் வழக்கம் போல் நடத்த இடையூறாக இருக்கும் ... மேலும்
 
temple
 வடமதுரை :வடமதுரை பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோயில் தரிசனத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.