பதிவு செய்த நாள்
02
மார்
2020
11:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பக்தர்கள் நடக்க சிரமம் அடைந்து வருகின்றனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், கோவில் வளாகத்தில் பதிக்கப்பட்டுள்ள கருங்கற்களால் ஆன, தரையில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து பக்தர்கள், நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், குழந்தைகள், முதியவர்கள், கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, கோவில் வளாகத்தில் நடந்து செல்ல வசதியாக, தேங்காய் நார்களால் ஆன தரைவிரிப்பான் அமைக்கவும், கூலிங் பெயின்ட் அடிக்க வேண்டும் எனவும், பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று பக்தர்கள் கூட்டம் வருகை அதிகமாக இருந்தது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.