பதிவு செய்த நாள்
02
மார்
2020
11:03
புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், தாளவாடியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, திருப்பணிகள் நடந்தன. நிறைவடைந்ததை தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த, 28ல், விநாயகர் வழிபாட்டுடன், கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து வேள்வி பூஜைகள் நடந்தன. நேற்று காலை யாக பூஜையை தொடர்ந்து, கோபுரங்களுக்கு கலசம் எடுத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை, 11:30 மணியளவில், கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின், மூலவர் மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் செய்து, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் நடந்தது. தாளவாடி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.