காரைக்கால்:உலக நன்மை வேண்டி காரைக்கால் சோமநாதர் கோவிலில் 35 ஆம் ஆண்டு மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள சோமநாயகி உடனமர் சோமநாதர் கோவிலில் உலக நன்மை வேண்டி நேற்று துர்கா வழிபாட்டு மன்றம் சார்பில் 35 ஆம் ஆண்டு மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. அதனையொட்டி காலை மங்கள விநாயகருக்கு அனுக்ஞை பூஜை. மகாசங்கல்பம். கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பின் மாலை நவசக்தி அர்ச்சனை நடைபெற்றது. நேற்று காலை மகா சண்டி ஹோமம் துவங்கி அஷ்டவைரவ பூஜை, கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜை, கன்யா பூஜை, தம்பதி பூஜை, சுவாசினி பூஜை நடைபெற்றது.பகல் 12:00 மணிக்கு யாத்ராதானம் கடம் புறப்பாடாகி துர்க்காம்பிகைக்கு கலச அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. இன்று காலை விநாயகர், துர்கை, மகாலட்சுமிக்கு பால்குட அபிஷேகம் மாலை சந்தன காப்பு அலங்காரம். திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.நிகழ்ச்சியில் அறங்காவலர் வாரியக்குழு தலைவர் கேசவன். துணைத் தலைவர் ஆறுமுகம். செயலர் பக்கிரிசாமி. பொருளாளர் ரஞ்சன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.