பதிவு செய்த நாள்
03
மார்
2020
10:03
பெரியகுளம்:பெரியகுளம் தென்கரை கோபாலகிருஷ்ணன் கோயிலில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், பயமின்றி ஞாபக சக்தியுடன் எழுதிட சிறப்பு பிரார்த்தனை, லட்சுமி ஹயக்ரீவர் ேஹாமம், சுதர்சன ேஹாமம், புண்யாஹ வாசனம், பகவத் பிரார்த்தனை, அக்னி பிரதிஷ்டை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. கோபாலகிருஷ்ணன், லட்சுமி ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார் அலங்காரத்தில் காட்சியளித்தனர். மாணவர்களுக்கு பேனா, லட்சுமி ஹயக்ரீவர் படம் மற்றும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அர்ச்சகர் கண்ணன் செய்திருந்தார்.அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடந்தது. பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ், மனதை ஒருநிலைப்படுத்தி செய்யும் செயலில் வெற்றி பெறலாம் என பேசினார். மாணவர்களுக்கு பேனா, பென்சில், ரப்பர் வழங்கப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்றனர்.