பதிவு செய்த நாள்
03
மார்
2020
10:03
ஊட்டி:ஊட்டி அப்புகோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை மற்றும் ஏழு ஹெத்தையம்மன்களுக்கு மாதாந்திர பூஜை நடந்தது.விழாவை முன்னிட்டு, காலை, 10:00 மணிக்கு, செல்வ விநாயகருக்கு அலங்கார பூஜை, ஆனந்தமலை முருகனுக்கு அபிஷேக பூஜை, ஏழு ஹெத்தையம்மன்களுக்கு ஆராதனை பூஜை மற்றும் நவகிரக தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை மிக சிறப்பாக நடந்தது. தொடர்ந்து, 12:00 மணிவரை ராமச்சந்திரன் குழுவினரின் பஜனை இடம்பெற்றது. மேற்குநாடு சீமை முக்கியஸ்தர் போஜன், அரசு கலை கல்லூரி விரிவுரையாளர் கவிதா ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பகல், 2:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை, ஆலய அறங்காவலர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.