திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வீரப்பூரில் மாரிம்மன் கோவிலில், மாசிப்பெருந்திருவிழா, கடந்த, 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை வரை, தொப்பம்பட்டி அருகே உள்ள வீரமலை அடிவாரத்தில் அண்ணன்மார் தெய்வநிலை அடைந்த கன்னிமார் குளக்கரை கருப்பசாமி கோவிலில், படுகளம் சாய்தல், எழுப்புதல் மற்றும் அம்மன் பூப்பல்லக்கில் பவனி வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மாலை, வீரப்பூர் பெரிய காண்டியம்மன் கோவிலில் இருந்து, பொன்னர் குதிரை வாகனத்தில் அனியாப்பூர் கோவிலுக்கு சென்று அம்பு போடும் நிகழ்ச்சி மற்றும் தேரோட்டம் நடந்தது. திருச்சி மட்டுமின்றி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.