சிங்கம்புணரி;சிங்கம்புணரி வேங்கைப்பட்டி சாலை புதுவயல் ராயன் கருப்பர் கோயில் மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 7ம் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 24 நாட்கள் மண்டலாபிஷேகம் கடைபிடிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் பூஜையும் அன்னதானமும் நடந்தது. நேற்று காலை மண்டலாபிஷேக சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.