பதிவு செய்த நாள்
03
மார்
2020
11:03
காஞ்சிபுரம் : ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரத்தின் சந்தன நிறம் மழுங்கி, கறுப்பாக மாறி வருவதால், புதிதாக வண்ணம் பூச வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் நகரில் உள்ள கோவில்களிலேயே பெரிய கோவிலாக, ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது.இக்கோவிலின் பல இடங்களில், போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளதாக, பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக, முகப்பில் உள்ள ராஜகோபுரம், கறுப்பு நிறமாக மாறி வருகிறது. இக்கோவில் கோபுரத்திற்கு பல வண்ணங்கள் பூசப்படுவதில்லை. மாறாக, சந்தன நிறம் மட்டுமே பூசப்படுகிறது.சில ஆண்டுகளுக்கு முன் பூசப்பட்ட சந்தன நிறம் மழுங்கி, கறுப்பாக மாறி வருகிறது. கோபுரத்தை துாய்மைபடுத்தி, சந்தன வண்ணம் பூச வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.