கொடைரோடு: காமலாபுரம் அருகே ஊத்துப்பட்டியில் மாலம்மாள், சென்னப்பன், கருப்பணசுவாமி கோயில் திருவிழா நடக்கிறது. நேற்று முன்தினம், விநாயகர் பூஜையுடன் துவங்கிய விழாவில் அம்மன் அழைப்பு, சிறப்பு அலங்காரம், அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன் விழா நேற்று நடந்தது. முன்னதாக, விரதமிருந்த பக்தர்கள் கோயில் வளாகத்தின் முன்புறம் வரிசையாக அமர்ந்தனர். சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பூஜாரி கோயிலை வலம் வந்தார். பின்னர், காத்திருந்த பக்தர்கள் தலையில், தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றல் நடந்தது.