பாலக்காடு: செம்பை பார்த்தசாரதி கோவிலில் 106-வது ஏகாதசி சங்கீத உற்சவம் கோலாகலமாக துவங்கியது.
பாலக்காடு மாவட்டம் கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவில் மாசி மாதம் திருவிழா ஏகாதசி திருவிழா நேற்று முன்தினம்கொடி ஏற்றத்துடன் துவங்கின. விழாவையொட்டி நடக்கும் நான்கு நாள் சங்கீத உற்சவத்தை நேற்று மாலை 5.45 மணியளவில் பத்மபூஷன் டி.வி., கோபாலகிருஷ்ணன், செம்பை வைத்தியநாத பாகவதர் உருவச்சிலை முன்னாள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து அவரது சீடரும் இலங்கையைச் சேர்ந்தவருமான சாலிவாகனன் சிவா குழுவினரின் சங்கீதக் கச்சேரி நடைபெற்றன. இதையடுத்து டி வி கோபாலகிருஷ்ணனின் சங்கீதக் கச்சேரி அனைவரையும் கவர்ந்தன. இவருக்கு கீ போர்டில் விக்னேஷ் சிவா, மிருதங்கத்தில் குழல்மன்னம் ராமகிருஷ்ணன், முக சங்கில் வெள்ளிங்கிரி ரமேஷ், வேடத்தில் வெளியேறி சதீஷ் ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். தொடர்ந்து சுகுமாரி நரேந்திர மேனோன் பாடினர்.