பதிவு செய்த நாள்
04
மார்
2020
11:03
ஆர்.கே.பேட்டை, மார்ச் 4 தறிகளுக்கு மாசி திங்கட்கிழமையில், பூஜை நடத்திய நெசவாளர்கள், வெள்ளாத்துார் அம்மன் கோவிலில், பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பொங்கலுக்கு பின், திங்கட்கிழமையில், தறிகளுக்கு பூஜை நடத்தி, தொழிலை தொடங்குவது நெசவாளர்களின் வழக்கம்.தை மாதம் திங்கட்கிழமைகளை தொடர்ந்து, மாசி மாத திங்களிலும் சில கிராமங்களில் இந்த விழா தொடர்ந்து வருகிறது.நேற்று முன்தினம், தறிகளுக்கு பூஜை நடத்திய நெசவாளர்கள், தங்களின் குலதெய்வமான வெள்ளாத்துாரம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடு நடத்தினர்.
காலை, 10:00 மணியளவில், கோவில் நந்தவனத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர்.ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், புச்சிரெட்டிபள்ளி, வங்கனுார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள், குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.சிலர், தங்களின் நேர்த்திக் கடனாக, ஆடு, கோழி உள்ளிட்டவற்றை அம்மனுக்கு செலுத்கினர். காலை முதல், இரவு வரை பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.