ஸ்ரீவி., பெரியமாரியம்மன் பூக்குழி விழா: மார்ச் 12ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2020 12:03
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா மார்ச் 12ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பூக்குழி வைபவம் நடப்பது வழக்கம். இதில் விருதுநகர், மதுரை, தேனி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பூக்குழி இறங்குவர். இந்தாண்டு விழா மார்ச் 12 காலை 8:05 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவில் தினமும் அம்மன் மண்டபம் எழுந்தருளல், வீதிஉலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி மார்ச் 23 மதியம் 1:45 மணிக்கு துவங்குகிறது. 24 காலை 11:00 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கலாராணி தலைமையில் கோயில் அலுவலர்கள் செய்கின்றனர்.