பதிவு செய்த நாள்
03
மே
2012
11:05
உடன்குடி: செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கஞ்சி பூஜையுடன் துவங்கியது. வரும் 5ம் தேதி அன்னமுத்திரி சிறப்பு பூஜை நடக்கிறது. செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோயில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இக்கோயிலில் பெரியசுவா மி, வயணப்பெருமாள், அனந்தம்மாள், ஆத்திசுவாமி, திருப்புளி ஆழ்வார், பெரியபிராட் டி அம்மன் ஆகிய தெய்வங்கள் ஐந்து சன்னதிகளில் எழுந்தருளி ஐந்து வீட்டு சுவாமி என அழைக்கப்படுகிறது. கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பூஜை திருவிழா நடந்து வருகிறது. இத்திருவிழா கடந்த 29ம் தேதி கஞ்சி பூஜையுடன் துவங்கியது. கடந்த 30ம் தேதி அன்னதானமும், சிறப்பு பூஜையும், மேக்கட்டி பூஜையும், 1ம் தேதி முழுநேர சிறப்பு பூஜையும், இரவு சமயசொற்பொழிவு, இன்னிசை கச்சேரியும் நடந்தது. நேற்று திருக்குறள் வினாடி வினாவும், திரைப்பட கச்சேரியும் நடந்தது. இன்று மற்றும் நாளை காலை 7.30 மணிமுதல் இரவு 10.30 மணி மரை முழுநேர சிறப்பு பூஜையும், வரும் 5ம் தேதி பகல் 11 மணிக்கு அன்னதானமும், மாலை 3 மணிக்கு அன்னமுத்திரி சிறப்பு பூஜையும் மாலை 4மணிக்கு அன்னமுத்திரி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. புனிதமாக கருதப்படும் அன்னமுத்திரி பிரசாதம் வாங்க ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்வர். மேலும் இத்திருவிழாவில் கலந்து கொள்ள சென்னை, கோவை, திருச்சி, மதுரை நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இரு ந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்வர். வரும் 6ம் தேதி இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகம் நட க்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணபவன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.