யோகப்பயிற்சி முற்றிலும் ஆன்மிகம் சார்ந்ததே. இதிலுள்ள எட்டு படிநிலைகளை அஷ்டாங்க யோகம் என்பர். யோகாசனம் இதில் ஒன்று. ஜாதி மத பேதமில்லாமல் எல்லோரும் இதனைப் பயில்வது அவசியம்.முதல் படிநிலைகளான இயமம், நியமம் என்பவை சத்தியம், தர்மம் போன்ற அடிப்படை ஒழுக்கங்களைப் போதிக்கின்றன. ஆசனம் உடல் ஆரோக்கியத்திற்காகவும், பிராணயாமம் மூச்சுபயிற்சிக்காகவும், தியானம் மனஒருமைக்காகவும் செய்வர். தாரணை, பிரத்தியாகாரம், சமாதி போன்ற உயர்நிலைகள் ஆன்மிகத்தில் பக்குவநிலைக்கு ஒருவரைத் தகுதிப்படுத்துகின்றன. மனம், உடல் ஆரோக்கியம் பெறும் நோக்கிலாவது யோகம் பயில்வது அவசியம்.