கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் நேற்று கருட சேவை உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. ஆறாவது நாளான நேற்று கருட சேவை உற்சவம் நடந்தது. மாலை பெருமாள் தாயாருக்கு அலங்கார திருமஞ்சனம் செய்தனர். பின்னர் பெருமாள் சாமிக்கு அலங்காரம் செய்துவித்து கருட வாகனத்தில் எழுந்தருள செய்து நாளாயிர திவ்ய பிரபந்தம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து கருட சேவையில் பெருமாள் வீதியுலா வந்தது. பாகவத கோஷ்டியினர் நாம சங்கீர்த்தன பஜனைகள் பாடினர். வைபவத்தினை தேசிக பட்டர் குழுவினர் செய்து வைத்தனர். இன்று (3ம் தேதி) மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.