திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழாவில் சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழாவின் 7ம் நாளான நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு சுக்கிரனுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், சுவாமி வீதியுலா நடந்தது.இரவு 8:00 மணிக்கு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரருக்கு வசந்த மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம், ஷோடசோபசார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 11:00 மணிக்கு முத்துப் பல்லக்கில் அலங்கரிக்கப்பட்ட சிவானந்த வல்லி சமேத வீரட்டானேஸ்வரர் எழுந்தருளி வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 7:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அருள், கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.