பதிவு செய்த நாள்
07
மார்
2020
12:03
மாசி மகத்தையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், ஆதிகும்பேஸ்வரர் கோவிலின் தேரோட்டம் நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து இழுத்தனர்.06.03.2020/தஞ்சாவூர்/என்.சுந்தரராஜன்/90475 26292- 4.30 மணி. எடிட் 1: பி.ஜெகன்நாத்- 97915 09121- 4.40 மணி. நாளை மகாமக குளத்தில் தீர்த்தவாரிதஞ்சாவூர்,மார்ச்.7 - மாசிமகத்தை முன்னிட்டு, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், நான்கு சுவாமிகளின் தேரோட்டம் நடந்தது.தஞ்சாவூர், கும்பகோணத்தில், மகாமகத்திற்கு தொடர்புடையை, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், இந்தாண்டு மாசிமக விழாவிற்காக கடந்த, 28ம் தேதி கொடியேற்றம் நடந்தது. அன்று இரவு சுவாமி -- அம்பாள், தனித்தனி இந்திர விமானத்தில் வீதியுலாவும், 2ம் தேதி அறுபத்தி மூவர் நாயன்மார்களின் வீதியுலாவும், 3ம் தேதி ஓலைச்சப்பரமும் நடந்தது.இதையடுத்து, நேற்று அதிகாலை, 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டமும், காலை, 8.30 மணிக்கு ஆதிகும்பேஸ்வரர், மங்கலாம்பிகை அம்பாள் தேரோட்டமும் ஒன்றன் பின் ஒன்றாக, நான்கு முக்கிய வீதிகளில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.தொடர்ந்து இன்று (7ம் தேதி) இரவு சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நாளான நாளை, 8ம் தேதி காலை, 9 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதியுலா புறப்பட்டு, மகாமக குளக்கரையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தொடர்ந்து காலை, 10.15 மணி முதல், 11.45 மணி வரை மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. இன்று தேரோட்டம்: அதே போல் மாசி மக விழா தொடர்புடைய காசிவிஸ்வநாதர் கோவில், அபிமுகேஸ்வரர் கோவில், கவுதமேஸ்வரர் கோவிலில் இன்று (7ம் தேதி) மாலை மகாமக குளக்கரையிலும், வியாழசோமேஸ்வரர் கோவிலில் தேரோடும் வீதியில் தேரோட்டம் நடக்கிறது.