பதிவு செய்த நாள்
07
மார்
2020
12:03
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், மாசி பவுர்ணமி வழிபாட்டிற்காக, இன்று முதல், நான்கு நாட்களுக்கு, பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு, வனத் துறையினர் அனுமதித்துள்ளனர்.
இன்று, சனிபிரதோஷம். மார்ச், 9ல், பவுர்ணமி வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், சதுரகிரி செல்வது வழக்கம்.இதை முன்னிட்டு, இன்று காலை, 6:00 மணி முதல், 10ம் தேதி மதியம், 12:00 மணி வரை, பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், ஓடைகளில் நீர்வரத்து குறைவாக இருப்பதாலும், எளிதில் தீப்பற்றும் பொருட்களையும், பிளாஸ்டிக் பைகளையும் எடுத்து செல்வதை தவிர்க்குமாறு, பக்தர்களுக்கு, வனத்துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.