பாலக்காடு: செம்பை பார்த்தசாரதி கோவிலில் 106-வது ஏகாதசி உற்சாகத்தையொட்டி நடந்துவரும் சங்கீத உற்சவம் நேற்று வெகு விமர்சியாக நிறைவு பெற்றன. பாலக்காடு மாவட்டம் கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவில் மாசி மாதம் திருவிழா ஏகாதசி திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கின. விழாவையொட்டி நடந்து வரும் நான்கு நாள் சங்கீத உற்சவத்தை கடந்த 3ம் தேதி பத்மபூஷன் டி.வி., கோபாலகிருஷ்ணன், துவக்கி வைத்தார்.
தொடர்ந்து இசைக் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடைபெற்றன. சங்கீத உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை 9 மணியளவில் தியாகராஜ பாகவதரின் யாசிப்பை நினைவூட்டும் வகையில் உஞ்ச விருத்தி பாடுதல் நடந்தன. தொடர்ந்து 10க்கு கோதண்டராமன் பாகவதர், மண்ணு ராஜகுமாரனுண்ணி, சதனம் ஹரிகுமார், வெள்ளிநேழி சுப்பிரமணியம், செம்பை வித்யாபீட ஆசிரியர்கள் ஆகியோர் தலைமையில் பஞ்சரத்தின கீர்த்தனை நடைபெற்றன. தொடர்ந்து இளம் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடைபெற்றன. தொடர்ந்து இளம் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடந்தன. மாலை 6.45 க்கு நடந்த பிரகாஷ் உள்ளியேரியின் ஆர்மோனியம் கச்சேரிக்கு வயலினில் ரோஜோ, மிருதங்கத்தில் மஹேஷ், தபலாவில் மஹேஷ் மணி, கடத்தில் தீபு ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். தொடர்ந்து பாதிரியார் போல் பூவத்திங்கல் குழுவினரின் சுச்சேரி நடைபெற்றன. இதையடுத்து நடைபெற்ற பிரபல இசைக் கலைஞர் ஜயனின் சச்சேரியுடன் சங்கீத உற்சவம் நிறைவு பெற்றன. இன்று நடக்கும் ஆறாட்டு நிகழ்ச்சியுடன் கோவில் உற்சவம் நிறைவு பெறுகின்றன.