பதிவு செய்த நாள்
08
மார்
2020
12:03
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவில், உற்சவருக்கு திருக்கல்யாணம் நடந்தது.
திருத்தணி முருகன் கோவிலில் கடந்த மாதம், 28ம் தேதி கொடியேற்றத்துடன் மாசி மாத பிரம்மோற்சவ விழா துவங்கியது.தினமும், காலை மற்றும் இரவு ஆகிய நேரங்களில், உற்சவர் முருகப் பெருமான், ஒவ்வொரு வாகனத்தில், மாட வீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பிரம்மோற்சவ விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று, உற்சவர் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம், இரவு, 9:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான், நந்தி ஆற்றின் கரையில் உள்ள கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில், உற்சவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் தீபாராதனை நடந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு மலைக்கோவிலுக்கு வந்து குதிரை வாகனத்தில் வீதியுலா வந்தார். அதிகாலை, 3:00 மணிக்கு, உற்சவர் முருகன், வள்ளிதிருக்கல்யாணம் நேற்று நடந்தது.