பதிவு செய்த நாள்
10
மார்
2020
10:03
திருப்போரூர்:திருக்கழுக்குன்றம், திருமலை சொக்கம்மன் கோவிலில், நேற்று, பவுர்ணமி விழா கோலாகலமாக நடந்தது.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின், உபகோவில்களில் ஒன்றான, திருமலை சொக்கம்மன் கோவில், கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது.பவுர்ணமி, பிரதோஷம் நாட்களில், கிரிவலம் வரும் பக்தர்கள், இக்கோவிலுக்கு சென்று வழிபட்டு செல்வர்.இக்கோவிலில், நேற்று, மாசி மாத பவுர்ணமியை ஒட்டி, மூலவர் சொக்கம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, சொக்கம்மன், முத்தங்கி சேவை அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர் ராஜேந்திரன் செய்திருந்தார்.