பரமக்குடி:பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் மாசி மக விழா கோலாகலமாக நடந்தது. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள் கருட வாகனத்தில் அலங்காரமாகி, நேற்று மாலை 6:00 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார். அங்கு கஜேந்திர மோட்ச தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடந்தது பிரசாதங்கள் வழங்கப்பட்டன.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோல் பரமக்குடி அனுமார் கோதண்டராமர் சுவாமி கோவிலில் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்தார். மாலை சிறப்பு அபிஷேகம் நிறைவடைந்து தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.மேலும் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மாசி மகத்தை ஒட்டி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.