தேவிபட்டினம் நவபாஷாண கோயிலில் ஆபத்தான நடைமேடைகளால் தவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2020 10:03
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம் நவபாஷாண கோயிலில் சேதமடைந்த நடை மேடைகளாலும், புரோக்கர்கள் தொந்தரவால் பக்தர்கள் பரிதவித்து வருகின்றனர்.தேவிபட்டினம் பகுதியில் நவபாஷாண கோயில் உள்ளது. இங்கு தோஷ பரிகாரங்கள் செய்வதற்காகவும், இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் பூஜைகளுக்காகவும் பக்தர்கள்வருகை தருகின்றனர். கடலுக்குள் நவபாஷாண சிலைகள் இருப்பதால், பக்தர்கள் இந்தப்பகுதிக்குசெல்ல கடற்கரையில் இருந்து நவபாஷாண கோயில் வரை 80 மீ., வரை நடை மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் உப்புக்காற்றால் தடுப்பு சுவர்களில் அரிப்பு ஏற்பட்டுசேதமடைந்துள்ளது. மக்கள் நடந்து செல்லும் தளங்களில் போடப்பட்ட டைல்ஸ் கற்கள் சேதமடைந்துபக்தர்கள் காலை பதம் பார்க்கிறது. பகல் நேரங்களில் பக்தர்கள் செருப்பு இல்லாமல் செல்வதால், வெப்பத்தினை தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.உடை மாற்றும் அறை சேதம்: பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு உடைமாற்றுவதற்கு அறைகளுக்கு செல்கின்றனர். அங்கு சேதமடைந்த கட்டடங்களால் பக்தர்கள் உடைமாற்றும் அறைகளுக்குள் செல்ல அச்சப்படுகின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வருமானத்தில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். கட்டடங்கள் பராமரிப்பு பணிகளை முழுமையாகமேற்கொள்வதில்லை.கழிப்பறைகள் முறையான பராமரிப்பு இல்லாததால், பக்தர்கள் தவித்து வருகின்றனர். பக்தர்களுக்கு குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.