பதிவு செய்த நாள்
10
மார்
2020
11:03
நகரி:சப்த கன்னியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் முடிந்து, ஓராண்டு நிறைவையொட்டி, நேற்று, சிறப்பு பூஜைகள் நடந்தன.
நகரி அடுத்த, ஏகாம்பரகுப்பம் ரயில் நிலையம் அருகே, ஏரிக்கரையில், கடந்த ஆண்டு, மார்ச் மாதம், சப்த கன்னியம்மன் கோவிலில், புதிய சிலைகள் ஏற்படுத்தி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.நேற்றுடன், ஓராண்டு நிறைவு அடைந்ததை தொடர்ந்து, அதிகாலை, கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை அமைத்து சிறப்பு கணபதி ஹோமம் நடந்தது.காலை, 11:00 மணிக்கு, 108 வலம்புரி சங்காபிஷேகம், மதியம், 12:00 மணிக்கு, கலச தீர்த்தம் அபிஷேகம் மற்றும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மேலும், அங்கு புதியதாக கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் வளாகம், நேற்று திறந்து வைக்கப்பட்டது.