ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் வாழும் வட மாநிலத்தினர் வண்ணப் பொடிகளை தூவி, ஹோலி பண்டிகையை நடனமாடி கொண்டாடினர்.
வண்ணங்களின் திருவிழா ஹோலி, வண்ணப் பொடிகளைத் துாவி மகிழ்ச்சி கொள்ளும் காட்சி, உள்ளத்தை கொள்ளை கொள்ளும். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஹோலி கொண்டாட்டம், வண்ண மேகங்கள் தரையிறங்கி வந்தனவோ என்று ரசிக்க வைத்தது. அதே வேளையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் கண்களில் உற்சாகம் மின்ன ஹோலி கொண்டாடிய பெண், கொரோனா அச்சத்தால் முகக்கவசம் அணிந்திருந்தார்.