சிங்கம்புணரி:சிங்கம்புணரி வடக்குத்தெரு அபிராமி அம்மன், சோனைக்கருப்பசாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு முதல் கால யாக பூஜை தொடங்கியது,கோ பூஜை, திருமறை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்திக்கு பின் யாக வேள்வி நடைபெற்று பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை நடைபெற்று காலை 9:00 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை காட்டப்பட்டது,தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கோவில் கலசத்தில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து அபிராமி அம்மன், சோனைக்கருப்பசாமி கோயிலில் தீபாராதனை காட்டப்பட்டது.சிறப்பு வேள்விகளை சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் பரம்பரை அர்ச்சகர் அருணகிரி சிவாச்சாரியார் மற்றும் சேவற்கொடி சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு வேள்வியை நடத்தினர்.ஏற்பாடுகளை அபிராமி அம்மன்,சோனைக்கருப்பசாமி பங்காளிகள் மற்றும் பெண்ணடி மக்கள் கும்பாபிஷேக குழுவினர் செய்திருந்தனர்.