Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்மானாலே மன உறுதிதான்! சுற்றி வந்தால் சுகம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நாளை நம் கையில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2020
04:03

நிலத்தில் பயிரிட நிலத்தைப் பண்படுத்த வேண்டும். அதுபோல, நம்பிக்கையை வளர்ப்பதற்கு மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். பொன்மொழிகளையும், போதனைகளையும் மனதில் விதைத்து, அவற்றை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள். ஒரு விவசாயி பயிரிடும் முன் என்ன செய்கிறார்? முதலில் நிலத்தில் இருக்கும் கற்களையும், குச்சிகளையும் பொறுக்கி எடுத்து மண்ணைப் பக்குவப்படுத்தி தரையை சமப்படுத்துகிறார், உழுகிறார், உரமிடுகிறார், நீர் பாய்ச்சுகிறார், அதன்பின்னரே நல்ல விதையை ஊன்றுகிறார்.நம் வாழ்க்கையிலும், நாம் அத்தகைய தயாரிப்பைச் செய்ய வேண்டும். அறநுõல்கள், ஞானிகள், முனிவர்களிடமிருந்து கற்ற கருத்துக்கள் விதைகளாக உள்ளன.


அவற்றை விதைத்து வளருங்கள். அதை வளர்ப்பது எளிதன்று. முயற்சி தேவை. முயன்றால் முடியும். சிறிய செயல்களைச் செய்வதற்குக் கூட கடினமான உழைப்பு தேவையாக இருக்கிறது. நம்பிக்கை இருந்தால் எல்லாம் நிறைவேறும்.உங்கள் உள்ளத்தில், நம்பிக்கையை வளர்க்க நீங்கள் முயலும்போது, நுõற்றுக்கணக்கான தடைகள் குறுக்கிடும். சோதனைகள் வரும், பல சந்தேகங்கள் எழும். சாதாரண வாழ்வியல் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கே நிறைய பாடுபட வேண்டும் என்றால், உயர்ந்த லட்சியமான ஆன்மிகத்தேடலை நிறைவேற்ற கடுமையான பாடுபட வேண்டியிருக்கும். ஏனெனில், ஆன்மிகத்திற்கு தேவை நம்பிக்கை.‘‘ஆண்டவன்... ஞானம்... போன்றவை பற்றியெல்லாம் ஏன் கவலைப்படுகிறாய்? இதில் ஈடுபடுவதால் என்ன பயன்? இனிமைகள் பலவற்றை ஆன்மிகம் இழக்கச் செய்து விடுமே!” என்றெல்லாம், உங்கள் நம்பிக்கையை குலைக்கும் வகையில் சிலர் பேசுவார்கள். நீங்கள் ஒரு திட்டத்தைத் துவங்கி நடத்தும் போதும், “இது வெற்றி பெறுமா? யோசித்தாயா?” என்றெல்லாம் பேசி, நம்பிக்கையை குலைப்பவர்களும் உண்டு.ஆன்மிகத்தில் மட்டுமல்ல, இதர செயல்களில் கவனம் செலுத்தும் போது, அவற்றில் இருந்து திசை திருப்பும் வகையில், பல கவர்ச்சிகள் நம்மை ஈர்க்கின்றன. இவற்றில் இருந்து ஆண்டவனின் துணையுடன் வெளி வர வேண்டும். நம்பிக்கை இருக்கும் இடத்தில் பயம் இருக்காது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. “ஆண்டவன் என்னை அனுப்பினான். என்னைக் காத்து வருகிறான். எனக்கு எல்லாவற்றையும் செய்து வருகிறான். எனக்கு தேவைப்படுவதை அவன் அளிப்பான். எனக்கு தேவைப்படாததைத் தரமாட்டான். நான் அழுது கேட்டால் கூட சிலவற்றை எனக்கு தரமாட்டான். காரணம், அது எனக்கு நல்லதன்று என்பது அவனுக்குத்ö தரியும்,” என்று யார் ஒருவர் நம்புகிறாரோ, அந்த நம்பிக்கை வாழ்வில் பேரானந்தத்தைத் தரும்.நம்பிக்கை உடையவர்களே! நாளைய உலகம் உங்கள் கையிலேயே சுழன்று கொண்டிருக்கிறது. தொடரும்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar