திருப்பதி : திருமலையில் வருடாந்திர தெப்ப திருவிழா ஐந்து நாட்கள் நடைபெற்றது. பவுர்ணமி நாளான்று நிறைவு நாள் விழா. அன்று தெப்பத்தில் தேவியர் சமேதரராய் சீனிவாசப்பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி ஏழு முறை வலம் வந்து தெப்பத்தை சுற்றியிருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருமலையில் ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமியை ஒட்டி வருடாந்திர தெப்போற்ஸவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி கடந்த வியாழக்கிழமை முதல் திருமலையில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளத்தில் ஏழுமலையான் தெப்போற்ஸவம் துவங்கி நடந்து வருகிறது. பவுர்ணமி நாளான்று தெப்ப திருவிழா நிறைவடைந்தது. அன்று தெப்பத்தில் தேவியர் சமேதரராய் சீனிவாசப்பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி ஏழு முறை வலம் வந்து தெப்பத்தை சுற்றியிருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கற்பூர ஆரத்தி அளித்து உற்ஸவமூர்த்திகளை வணங்கினர்.