சபரிமலைக்கு வர வேண்டாம்: தேவசம் போர்டு வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2020 11:03
சபரிமலை: சபரிமலையில் வரும் 14 - 18ம் தேதி வரை நடைபெற உள்ள மாத பூஜைக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் உயிர்கொல்லியான கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக கேரளாவில் இதுவரை 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சபரிமலையில் மார்ச் 14 முதல் 18ம் தேதி வரை நடைபெறும் மாத பூஜைக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.