கம்பம்:வீரபாண்டி சித்திரை திருவிழாவிற்கு, மே 6 முதல் 14 வரை பெரியாற்றில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடவும்,பராமரிப்பு பணிகளுக்காக மே 6 வரை,கம்பத்திற்கு குடிநீர் திறப்பது நிறுத்தப்படுவதாகவும், பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வன் கூறியதாவது :முல்லைப் பெரியாறு அணையில் தலைமதகு பகுதியில் ஆகாயத் தாமரை படர்வதை தடுக்க ககம்பி வலை அமைக்கப்படுகிறது. இதில் 60 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளுக்காக அணையை அடைக்க வேண்டியுள்ளது. எனவே மே 3 முதல் அணை அடைக்கப்பட்டு, மே 6ல் காலை தண்ணீர் திறக்கப்படும். இதனால் கம்பம் நகருக்கு வரும் வரை தண்ணீர் சப்ளை நிறுத்தப்படுகிறது. 7 ந் தேதி காலை குடிநீர் சப்ளை சீராகும். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்காக மே 6 முதல் 14 வரை தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும். அதன் பிறகு அடைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும், என்றார்.