ராஜபாளையம்: ராஜபாளையம் அழகாபுரியில் 15 ஊர் சமுதாயம் சார்பில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
இதை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, பூர்ணாகுதி முதல் கால யாக பூஜைகள், மந்த்ர பாராயணம், தீபாராதனை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, கலசங்கள் புறப்பாடு நடந்தது. இதை தொடர்ந்து கலை 9:00 மணிக்கு விமானம் அதை தொடர்ந்து மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.சுற்றுப்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கும்பாபிஷேகத்தை மாயூரநாத சுாவமி கோயில் கார்த்திக் சிவம், சரவண பட்டர் நடத்தினர். ஏற்பாடுகளை 15 ஊர் பொது மக்கள் சார்பில் விழா குழுவினர் செய்தனர்.