பதிவு செய்த நாள்
16
மார்
2020
01:03
திண்டிவனம் : விஸ்வஹிந்து பரிஷத் பூஜாரிகள் பேரமைப்பு சார்பில், கீழ்மன்னூர் முருகப்பொருமான் கோவிலில் சிறப்பு பஜனை நடந்தது. திண்டிவனம் அடுத்த கீழ்மன்னூரில் வயலூர் முருகப்பெருமான் கோவில் விஸ்வஹிந்து பரிஷத் பூஜாரிகள் பேரமைப்பு சார்பில் சிறப்பு பஜனை மற்றும் திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 9 மணிக்கு முருகர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.அதை தொடர்ந்து சிறப்பு பஜனையும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட பூஜாரிகள் பேரமைப்பு தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில், நிர்வாகிகள் ஜெயந்தி, ராமதாஸ், நாகராஜ், ஒலக்கூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் குப்புசாமி, சக்திவேல், வேலாயுதம், சுப்புராயன், பாபு, மயிலம் ஒன்றிய பொறுப்பாளர் சத்தியமூர்த்தி, மரக்காணம் ஒன்றிய பொறுப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.