பதிவு செய்த நாள்
16
மார்
2020
01:03
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த புத்தேரி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு சிறப்பு பூஜை; 10:30 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிேஷகம்; 11:00 மணியளவில் கலசபூஜை, சிறப்பு ேஹாமம்; மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். அலங்கரிக்கப்பட்ட பெருமாள் சுவாமி புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜை ஏற்பாடுகளை தலைவர், அறங்காவலர்குழு, ஆலோசகர் ராதாகிருஷ்ணன், தமிழ்மணி ராதாகிருஷ்ணன் உட்பட கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.