கோத்தகிரி: சிறியூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், கொரோனா வைரஸ் எதிரொலியாக, நடப்பாண்டு கோழி வெட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரியில், கடந்த வாரம் துவங்கி, மாரியம்மன் திருவிழா பல்வேறு கிராமங்களில் நடந்து வருகிறது. கிராமங்களில், நேர்த்திக்கடன் செலுத்து பவர்கள் உட்பட, கிராம மக்கள் கோழி வெட்டி, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்குவது வழக்கம்.இந்நிலையில், சிறியூர் மாரியம்மன் கோவிலில் திருவிழா துவங்கியது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் எதிரொலியாக, கோழி பலி கொடுப்பதும், சமைத்து உண்ணுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.இவ்விழாவில், எட்டூர் தலைவர் மாதவன் கூறுகையில்,விழாவில், நேர்த்தி கடனுக்காக பக்தர்கள் கோழி வெட்டுவது வழக்கம். நடப்பாண்டு, கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் எதிரொலியாக, கோழி வெட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது. நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள், ஆடு பலி கொடுக்க அறிவுறுத்தினோம், என்றார்.