தீட்டுக் காலங்களில் நெற்றியில் திருநீறு, குங்குமம் இட்டுக் கொள்ளலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2020 03:03
பஸ்மம் என்ற விபூதி பாவங்களைப் போக்கும் தன்மை உடையது. குங்குமம் லக்ஷ்மீகரத்தைத் தருவது. தீட்டுக் காலங்களில் குளித்த பிறகு நீாில் குழைக்காமல் விபூதியை நெற்றியில் பூசுவது நல்லது. பஸ்ம தாரணம் என்ற விபூதி இடுதல் விதியின்படி மோதிர விரல் மற்றும் கட்டை விரலால் விபூதியை எடுத்து, ஓம் நமசிவாய என்று மூன்று முறை சொல்லி பூசுதல் வேண்டும். தீட்டுக் காலங்களில் விபூதி பூசிக்கொண்டுதான் கா்மங்களைச் செய்ய வேண்டும் என்பது ஒரு தகுதி, யோக்யதாம்ஸம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால், தாராளமாக விபூதி இட்டுக் கொள்ளலாம்.