காளஹஸ்தி செங்கல்வராய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2025 10:07
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று (16.7.2025) துவங்கியது. இந்த மாதம் 25ம் தேதி வரை சிறப்பாக நடைபெறும் விழாவில முதல் நாளான நேற்று காலை, ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய சுவாமி வெள்ளி அம்பாரி வாகனத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து மாலை ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் அலங்கார மண்டபம் அருகில் உள்ள செங்கல்வராய சுவாமியின் கொடியேற்றம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கோயில் வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க தீப தூபங்கள் ஹோமங்களுடன் விழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.