விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக அறிவிக்க கலெக்டரிடம் மனு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2025 12:07
மதுரை; விநாயகர் சதுர்த்தி ஆக.27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு, மகாராஷ்டிரா மாநிலத்தை முன்மாதிரியாகக் கொண்டு அந்நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் எனக்கூறி அகண்ட ஹிந்து ராஷ்டிரா தலைவர் திருவண்ணாமலை ஆதினம் கருணாநிதி சுவாமிகள், தென்னிந்திய இஸ்லாமிய மக்கள் எழுச்சி கழக தலைவர் சுல்தானுடன் வந்து மதுரை கலெக்டர் பிரவீன்குமாரிடம் மனு கொடுத்தார். அவர் மேலும் கூறியதாவது: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக த.வெ.க., நடத்திய போராட்டத்தின் போது, சி.பி.ஐ., விசாரணை அமைப்பை பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்.,சின் கைக்கூலி போல செயல்படுவதாக பேசியது கண்டிக்கத்தக்கது. அரசியல் மேடையில் விசாரணை அமைப்பை அவதுாறு பேசுவது ஏற்கத்தக்கது அல்ல. இதுதொடர்பாக விஜய் மீது புகார் அளிக்க உள்ளோம். அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். சுல்தான் கூறுகையில், ‘‘மதஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என மனு அளிக்க கருணாநிதி சுவாமிகளுடன் வந்துள்ளேன். விநாயகர் சதுர்த்தியை மதரீதியாக விமர்சிக்கும் அமைப்புகளின் மத்தியில் மதஒற்றுமையை வெளிப்படுத்துவதே நோக்கம்’’ என்றார்.