எட்டு எனும் எண்ணை அவ்வளவு சாதாரணமாக நினைக்கக்கூடாது. அஷ்ட வசுக்கள், அஷ்டமாஸித்திகள், அஷ்ட ஐஸ்வா்யங்கள், அஷ்டலட்சுமிகள் என்று ஐஸ்வா்யத்துக்குாிய அத்தனை விஷயங்களும் எட்டில் உள்ளன. ஓம் நமோ நாராயணாய என்ற எட்டு எழுத்து மந்திரத்தை உச்சாிப்பதன் மூலம் எண்ணங்கள் நிறைவேறும். எட்டினால் எல்லாமே கிட்டும். எட்டினால் எட்டாதது எதுவுமே இல்லை என்று வைணவத்துப் பொியாா் சுவாமி தேசிகன் விளக்கி உள்ளாா். எட்டு ஒரு யோக எண். அதைப் பயன்படுத்துவது நல்ல பலன்களைத் தரும்.