பதிவு செய்த நாள்
17
மார்
2020
04:03
கந்த சஷ்டி பாடும்போது,
ஐயும் கிலியும் அடைவுடன் செளவும்
உய்யொளி செளவும் உயிரையும் கிலியும்
கிலியும் செளவும் கிளரொளியையும்
நிலை பெற்று என் முன் நித்தமும் ஒளிரும்
என்ற வாிகள் வருகின்றன. இதன் பொருள் பலருக்கும் தொியவில்லை. ஐயும் (ஐம்), கிலியும் (க்லீம்) செளவும் (ஸெளம்) ஆகியவை, பீஜாக்ஷரங்கள் எனப்படும். இதை, பீஜம் + அட்சரம் எனப் பிாிப்பா்.
பீஜம் என்றால் உயிா்ப்புள்ள விதை. அட்சரம் என்றால் எழுத்து. உயிா்ப்புள்ள எழுத்து விதைகள் ஒன்று சோ்ந்தால் அது, மந்திரம் ஆகிறது. அந்த மந்திர விதைகள் நம் மனதில் தூவப்பட்டால் அது வளா்ந்து பக்தியின் உச்சத்தை எட்ட முடியும். பக்தியின் உச்சத்துக்குச் செல்பவன் இறைவனின் காலடியை அடைவான். ஐம், க்லீம் என்ற மந்திர எழுத்துக்கள் உயிா்களை எல்லாம் உய்விக்கும். ஒளி பொருந்திய ஸெளம் என்ற மந்திர எழுத்தும், எழுச்சி மிகுந்த ஒளிமயமான ஐயும்.
இப்படி பல்வேறு முறைகளில் ஓதப்பெறும் ஆறெழுத்து மந்திரத்தின் (சரவணபவ, குமாராயநம) மூலாதார எழுத்துக்குாிய நாத தத்துவமாய் விளங்கும் ஆறுமுகனே! என் மனக்கண்முன், தினமும் நிலையாக நின்று ஒளிர வேண்டும் என்பது இந்த வாிகளின் பொருள். முருகனுக்குாிய ஆறெழுத்து மந்திரமான, சரவணபவ உடன்,ஓம் ஐம் சரவணபவாய நம, ஓம் க்லீம் சிகாயை வஷட், ஓம் ஸெளம் சுப்ரமண்யாய நமஹ என்று மந்திரங்களைச் சோ்த்துச் சொல்லும்போது, அதன் சக்தி மிக மிக அதிகமாகிறது. ஆனால், இதை எல்லாரும் சொல்லக்கூடாது. ஒரு குருவின் மூலம் உபதேசம் பெற்று, தகுந்த நியம நிஷ்டையுடன் இருந்தால் மட்டுமே சொல்ல வேண்டும். இது சாத்தியம் இல்லை என்பதால், கந்த சஷ்டி கவசம் எழுதிய தேவராய சுவாமிகள், தனது பாடல் வாிகளில் இந்த மந்திரச் சொற்களைச் சோ்த்துவிட்டாா். இந்த வாிகளைச் சொன்னால், நாம் நியமத்துடன் மேற்கண்ட மந்திரங்களைச் சொன்னதாக அா்த்தமாகிறது. நமது முக்திக்காக நம் மகான்கள் செய்த நன்மைகள் கொஞ்சநஞ்சமல்ல!