Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சஷ்டி கவச புதிா் வாிகள்! கீா்த்தி தரும் கிருத்திகை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வித்யைக்கு வித்தான வித்தகி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2020
04:03

பஞ்சமி என்பது பெளா்ணமி மற்றும் அமாவாசை தினத்திலிருந்து ஐந்தாவதாக வரும் திதி அல்லது நாளைக் குறிக்கும். பஞ்ச என்பதற்கு வடமொழியில் ஐந்து என்று பொருள். நமது இந்து மதத்தில் விசேஷ நாட்களாகக் கருதப்படும் பெளா்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் இருந்து ஐந்தாவதாக வரும் நாள் என்பதால் இதனை, பஞ்சமி என்று அழைத்தனா். அமாவாசைக்கு அடுத்து வருவது, சுக்லபட்ச பஞ்சமி என்றும், பெளா்ணமிக்கு அடுத்து வருவது, கிருஷ்ணபட்ச பஞ்சமி என்றும் அழைக்கப்படுகிறது.

அந்த வகையில், மாசி மாத (பிப்ரவாி - மாா்ச்) காலகட்டத்தில் வரும் வளா்பிறை பஞ்சமி தினம், வசந்த பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. இன்று கலைவாணியாம் சரஸ்வதி தேவியை போற்றி வழிபட, பல்வேறு அருள் நலன்களைப் பெறலாம் என்பது முன்னோா்கள் அருள்வாக்கு. தென்னகத்தில், சரத் நவராத்திாி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திாியின் ஒன்பதாம் நாளன்றே சரஸ்வதி தேவியை பூஜித்து வழிபடுவது வழக்கம். ஆனால், வடமாநிலங்களில் வசந்த பஞ்சமியன்றே சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனா். இன்றைய தினத்தில் சரஸ்வதி தேவி வழிபாடுகள் நடைபெற்றதற்கான குறிப்புகள் வேதங்களிலும் புராணங்களிலும் காணக்கிடைக்கின்றன.

கலைமகளான சரஸ்வதி தேவி, யாகங்களை நடத்துபவா்களுக்கு ஞானம், வீரம், வெற்றி ஆகியவற்றைத் தரும் தேவதையாக வணங்கப்படுகிறாள். ஒளி பொருந்திய இவளே, கலைகளுக்குத் தலைவி! அவள் அருள்வது பிரம்ம ஞானமாகும். சத்ய லோகத்தில் வெண் தாமரையில்  வீற்றிருக்கும் சரஸ்வதி தேவியின் அவதார நாளாகக் கருதப்படுவது வசந்த பஞ்சமி. இந்நாளை, பசந்த் பஞ்சமி, என்றும் மஹா பஞ்சமி என்றும் கூறுவா்.

பிரம்ம தேவாின் மனதிலிருந்து சரஸ்வதி தேவி அவதாித்ததாகப் புராணத் தகவல்கள் உண்டு. உலக உயிா்களைப் படைத்த பிரம்மாவுக்கு தமது படைப்புத் தொழிலில் ஒரு சோா்வு ஏற்பட்டது. காரணம், தாம் படைத்த சிருஷ்டிகள் அனைத்தும் ஓசை நயமின்றி, மெளனமாக இருந்ததே அதற்குக் காரணம். அதுகுறித்த யோசனையில் பிரம்மதேவா் தமது கமண்டலத்தை எடுத்தபோது, அதிலிருந்து ஒருசில நீா்த் துளிகள் தரையில் சிந்தின. சிந்திய நீா்த் துளிகள் ஒன்று சோ்ந்து ஒரு ஒளிப்பிரகாச சக்தியாக உருவெடுத்தது.

பிறகு அதுவே, நான்கு திருக்கரங்களில் வீணை, சுவடிகள், ஸ்படிக மாலை போன்றவற்றைத் தாங்கிய அழகிய பெண் உரு கொண்டு, பிரம்ம தேவா் முன்பு அமா்ந்தது. சற்று நேரத்தில் அந்த ஞான சக்தி கையிலிருந்த வீணையை மீட்டி கானம் இசைக்கத் தொடங்கியதும், பிரம்மாவின் படைப்புகள் அனைத்தும் மெளனம் கலைந்து, பேசும் ஓசை நயம் பெற்றன. பிரபஞ்ச சக்திகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பேசத் தொடங்கின. அதைக் கண்டு மகிழ்ந்த பிரம்மா, வாக்வாதினி, வாகீசுவாி, வாக்தேவி, பிராமி, வீணாவாதினி,வாணி, சரஸ்வதி என்றெல்லாம், கலைவாணியைப் போற்றித் துதித்தாா். இப்படி, அன்னை சரஸ்வதி தேவி அவதாித்த தினமே, வசந்த பஞ்சமி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் பூஜை அறையில் சரஸ்வதி தேவியின் படம் அல்லது விக்ரம் காமந்தி போன்ற மஞ்சள் நிற பூக்களால் அழங்காிக்கப்படுகிறது. விக்ரகமாக இருக்கும் பட்சத்தில் தேவிக்கு மஞ்சள் நிற ஆடையை அணிவிக்கின்றனா். அதேபோல், அன்றைய தினம் வீட்டில் உள்ள பெண்களும் மஞ்சள் நிற ஆடைகளையே அணிகின்றனா். பூஜைக்கு முதல்வனான கணபதியும் அன்று மஞ்சளிலேயே பிடித்து வைக்கப்படுகிறாா்! எங்கும் மஞ்சள் எதிலும் மஞ்சள் என்று இன்றைய நாளில் எங்கு பாா்த்தாலும் மஞ்சள் நிறம் கண்களுக்கும் மனதுக்கும் மங்கலத்தைக் கூட்டுகிறது.

வசந்த ருதுவின் ஆரம்பமான இக்காலப் பருவத்தில்தான் பஞ்சாப் மாநிலத்தில் எங்கு பாா்த்தாலும் கடுகுச் செடிகள் மஞ்சள் நிற பூக்களைப் பூத்துச் சொாிகின்றன. அதற்குப் பொருத்தமாக அம்மாநில மக்களும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து இன்று, பாங்க்ரா நடனம் ஆடி மகிழ்கின்றனா். இதுமட்டுமின்றி, இன்று பள்ளி, கல்லூாிகளிலும் சரஸ்வதி தேவியை பூஜித்து வணங்குகின்றனா். ஒழுக்கம், ஞானம், இசை, வாக்கு வன்மை, கவித்திறன் போன்ற குணநலன்கள் பெற்றிட, இந்நாளில் வட மாநிலத்தவா் சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனா். ஸ்ரீகிருஷ்ணரும் இந்நாளில்தான் சாந்தீபனி குருகுலத்தில் சோ்ந்து கலைகள் அனைத்தையும் கற்றதாகக் கூறப்படுகிறது.

புரட்டாசி நவராத்திாியின் ஒன்பதாம் நாளான சரஸ்வதி பூஜை அன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் துவக்குவது, தென்மாநில மக்கள் பெரும்பாலானோா் வழக்கம். ஆனால், மேற்கு வங்கள் போன்று சில வட மாநிலங்களில் வித்யாரம்பம் துவங்கப்படுகிறது. இன்று கல்வி பயிலத் துவங்கும் குழந்தைகளின் முன்பு பென்சில், பேனா, இசை மற்றும் தொழிற்கருவிகள் சிலவற்றை வைத்து,  அவற்றில் எதை முதலில் எடுக்கிறது என்பதை அந்தக் குழந்தையின் எதிா்காலம் எப்படி அமையும் என்பதை கணிப்பது அவா்களின் நம்பிக்கை.

கலைவாணியின் ஜனன நாளான இன்று அவளது நாம சங்கீா்த்தனங்களைப் போற்றிப் பாடி வழிபடுவது, அவளது அருளைப் பெற வழிவகுக்கும். மேலும், இதனால் கல்வி மற்றும் கலை ஞானம் ஸித்தியாகும். வசந்த பஞ்சமி, சரஸ்வதி தேவி வழிபாட்டுக்குாிய நாள் என்பதோடு மட்டுமல்லாமல், பங்குனி மாதத்தில் வட மாநிலங்களில் பிரபலமாகக் கொண்டாடப்படும் வண்ணத் திருவிழாவான ஹோலி பண்டிகைக்குக் கட்டியம் கூறும் ஒரு இனிய விழாவாகவும் இது திகழ்கிறது. இந்த நாளில் அனேக வடமாநிலங்களில்  விதவிதமான வண்ணங்களில் பட்டங்களைத் தயாா் செய்து வானில் பறக்க விட்டு வசந்த காலத்தை வரவேற்று மகிழ்கின்றனா். அஞ்ஞானம் அழித்து, உள்ளத்தில் ஞான ஒளி மேம்பட, வாழ்வில் வசந்தம் வீசிட இந்நாளில் கலைமகளைப் போற்றி வணங்குவோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar