பதிவு செய்த நாள்
20
மார்
2020
10:03
திருவள்ளூர்: திருவள்ளூர், சிவ -- விஷ்ணு கோவிலில் உள்ள ஜலநாராயணர் சன்னிதியில், ஏகாதசியை முன்னிட்டு, நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.திருவள்ளூர், பூங்கா நகரில், சிவ -- விஷ்ணு கோவில் அமைந்துள்ளது. இங்கு, நான்கு கரத்துடன், ஆகாயத்தை பார்த்தபடி அருள்பாலிக்கும் ஜலநாராயணி தாயார் உடனுறை ஜலநாராயண பெருமாளை, இக்கோவிலில் தத்ரூபமாக உருவாக்கி உள்ளனர்.ஏகாதசியை முன்னிட்டு, நேற்று காலை, 8:00 மணிக்கு, லட்சுமி ஹயக்கிரீவருக்கு அபிஷேகம், காலை, 8:30 மணிக்கு, சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, ஜலநாராயணி தாயார் மற்றும் ஜலநாராயணருக்கு, காலை, 9:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.